என்னடா இது மதுரை, கோயம்புத்தூர் காரனுக்கு சோதனை! வெயில் எகிறப் போகுதாம்!!

published 10 months ago

என்னடா இது மதுரை, கோயம்புத்தூர் காரனுக்கு சோதனை! வெயில் எகிறப் போகுதாம்!!

கோவை: கோவை மதுரையில் ஏப்ரல் 3, 4 தேதிகளில் வெப்பம் கடுமையாக அதிகரிக்குதாம்.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

கோவையில் இன்று 36 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என்றும், நாளை முதல் வரும் 3ம் தேதி வரை 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேலும், வரும் 4ம் தேதி அதிகபட்சமாக 38 டிகிரி வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டடுள்ளது.

மதுரையன்ஸ் பாடு இதனைவிட திண்டாட்டமாம். இன்றும் நாளையும் 39 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ள்ளதாகவும், ஏப்., 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, புதுவையில் 36 டிகிரி வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாம்.

சென்னையன்ஸ்:- "குமுதா ஹேப்பி அண்ணாச்சி".

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe