கோவையில் மலைவாழ் மக்களுடன் பாரம்பரிய நடனமாடி வாக்கு சேகரித்த திமுக வினர்...

published 10 months ago

கோவையில் மலைவாழ் மக்களுடன் பாரம்பரிய நடனமாடி வாக்கு சேகரித்த திமுக வினர்...

கோவை: இந்தியா கூட்டணியின் கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.

 

இந்நிலையில் 
கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி பாலமலை கிராமத்தில் மாநில மாணவரணி தலைவரும் கவுண்டம்பாளையம் பொறுப்பாளருமான இரா ராஜீவ் காந்தி, மாவட்ட துணைச்செயலாளர் அசோக் ஆறுக்குட்டி உள்ளிட்டோர் 

மலைவாழ் மக்களுடன் சேர்ந்து அவர்களின் பாரம்பரிய நடனம் ஆடியும், மேளதாளம் முழங்கியும் இந்தியா கூட்டணியின் கோயம்புத்தூர் பாராளுமன்ற வேட்பாளர் கணபதி ராஜ்குமார்  உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.

இந்த செய்திக்கான வீடியோ: https://www.youtube.com/shorts/5kGuYwwvdwo

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe