தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் போற்றுவது பிரதமர் மோடி தான்- கோவையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி...

published 10 months ago

தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் போற்றுவது பிரதமர் மோடி தான்- கோவையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி...

கோவை: வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நீலகிரியில் 25ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட போது அங்கு ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து போலீசார் நடத்திய தடியடியில் பாஜக வினர் காயமடைந்தனர். போலிசார் சிலரும் காயமடைந்தனர்.

இந்நிலையில்  காயமடைந்த பாஜக தொண்டர்கள் சில கோவை பிஎஸ்ஜி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மத்திய இணை அமைச்சரும் நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளருமான முருகன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கடந்த 25 ம் தேதி நீலகிரியில் பாஜக விற்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தோம் எனவும், அப்போது நாங்கள் மனு தாக்கல் செய்வதற்காக உள்ளே சென்ற நேரத்தில் காவல்துறை நடத்திய தடியடி சம்பவத்தில் முரளிதரன் என்பவர் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு தலையில் அடிபட்டு மேல் சிகிச்சைக்காக பிஎஸ்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றார். 
அவருக்கு இடதுபுற மூளையில் அடிபட்டு இருப்பதால் அறுவை சிகிச்சை செய்துள்ளனர் எனவும் அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்து கொண்டிருப்பதாகவும் கூறினார்.

திமுகவின் காவல்துறை பாஜகவின் தொண்டர்கள் மீதும், பொதுமக்கள் மீதும் கூட அன்று  தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவித்தார். இந்த தாக்குதலில் காயம் அடைந்த இருவர் நேற்று தான் உதகை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதாக தெரிவித்தார்.

ஊட்டி காவல் துறை இங்கு ICU வில்  சிகிச்சை பெற்று வருபவர்களையும் தொல்லை கொடுத்து இருக்கின்றனர் எனக் கூறிய அவர் திமுக காவல்துறை இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டி இருக்கும் என தெரிவித்தார்.

பொது மக்களை பாதுகாக்க வேண்டியது தான் காவல்துறை வேலை. ராசா வீட்டுக்கும், ஸ்டாலின் வீட்டுக்கும் வேலை செய்வதற்கு காவல்துறை இல்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.
மேலும் காவல் துறை பொதுமக்களை பாதுகாப்பவர்களாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

பிரதமர் இந்தி திணிப்பில் ஈடுபடுவதாக முதல்வர்  ஸ்டாலின் சொல்லுகிறார் ஆனால்தமிழை போற்றுவது பிரதமர் நரேந்திர மோடி எனவும் கடந்த 10 ஆண்டுகளில் திருக்குறளை மட்டும் 35 மொழிகளில் மொழிபெயர்த்து திருக்குறளை வெளியிட்டு இருக்கிறார் என தெரிவித்தார். மேலும் பாரதியாருக்கு பெருமை சேர்க்கும் விதமாக பனாரஸ் பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது எனவும் காசி தமிழ் சங்கம் மூலம் இரு முறை தமிழகத்திற்கும் காசிக்குமான உறவை வெளிப்படுத்தி இருக்கிறார் எனவும் ஐநா சபையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலகிலேயே தமிழ் தான் புராதானமான மொழி தமிழ் தான் உண்மையான மொழி என்று தமிழை உலகம் முழுவதும் சொல்லி கொண்டிருக்கிறார் என தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி தமிழர்களின் பாரம்பரியம், நீதி நேர்மை தவறாத ஆட்சி பரிபாலனை  எடுத்துக்காட்டு புனிதமான செங்கோல், 
அந்த செங்கோலை பாராளுமன்றத்தில் நிறுவியதோடு மட்டுமல்லாமல், தமிழகத்தில் இருந்து அனைத்து ஆதீனங்களையும் புடைசூழ  தொடக்க விழாவில் கலந்து கொண்டனர் எனவும் பாராளுமன்ற திறப்பு விழாவை புறக்கணித்தது திமுகவும் ஸ்டாலினும் என தெரிவித்தார்.

பாரா மிலிட்டரி தேர்வுகளை எல்லாம் தமிழில் எழுதலாம் என்ற அரசாணையை கொடுத்தவர் பிரதமர் எனவும் செம்மொழி ஆய்வகத்திற்கு 100 கோடி ரூபாய்க்கு மேல்  நிதி ஒதுக்கீடு செய்தவர் பிரதமர் எனவும் தெரிவித்த அவர் தமிழை வைத்து , தமிழ் மொழியை வைத்து பிழைப்பு நடத்த வேண்டாம் என்பதை ஸ்டாலினுக்கு சொல்லிக் கொள்கிறேன் எனவும் தமிழைப் போற்றுவது தமிழ் கலாச்சாரத்தை போற்றுவது தமிழ் பண்பாட்டை போற்றுவது பிரதமர் மோடி தான் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe