ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது..! ; கோவையில் 650 புதிய குப்பைத்தொட்டிகள்..!

published 2 years ago

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது..! ; கோவையில் 650 புதிய குப்பைத்தொட்டிகள்..!

கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில் பழுதடைந்த குப்பைத் தொட்டிகளை மாற்றிவிட்டு புதிய குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட உள்ளன.  இதற்காக முதல்கட்டமாக 650 புதிய குப்பைத் தொட்டிகள் வாங்கப்பட்டுள்ளன என மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சியில் மத்திய, கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என ஐந்து மண்டலங்கள் உள்ளன. இதில் 100 வார்டுகள் உள்ளன. சுமார் 6,500 தெருக்கள் உள்ளன. 

15 லட்சம் குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் கோவை மாநகராட்சி சார்பாக மண்டலம் வாரியாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பேருந்து நிலையங்கள் என முக்கிய இடங்களில் பொதுமக்கள் குப்பைகள் போடுவதற்கு எதுவாக குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.  ஆனால் இந்த குப்பைத் தொட்டிகள் அனைத்தும் பழுதடைந்தும், உடைந்த நிலையிலும் காணப்படுகின்றன. இதனால் தெரு நாய்கள் இரவு நேரங்களில் குப்பைகளைக் கலைத்து தெருக்களில் சிதற விடுகின்றன. இன்னும் சில இடங்களில் குப்பைத் தொட்டிகளிலிருந்து காற்று அடிக்கும்போது பறந்து வந்து சாலைகளில் விழுகின்றன. இதனால் பொதுமக்களும், வாகன ஒட்டிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். 

இந்நிலையில் புதிய குப்பைத் தொட்டிகள் வாங்க மாநகராட்சி சார்பாக முடிவு செய்யப்பட்டது. இது குறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவை மாநகராட்சி சார்பாக 1000 குப்பைத் தொட்டிகள் புதியதாக வாங்க முடிவு செய்யப்பட்டதில் முதல்கட்டமாக 650 குப்பைத் தொட்டிகள் வாங்கப்பட்டுள்ளன. வார்டு வாரிய இந்த குப்பை தொட்டிகள் தேவையான இடங்களில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். இனிமே குப்பைகளைச் சாலைகளில் எறிந்துவிட்டுச் செல்லும் நபர்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது தானே..?

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe