ரயில்வே நிர்வாகத்தின் திறனற்ற நடவடிக்கையால் விபரீதம்- கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன்...

published 10 months ago

ரயில்வே நிர்வாகத்தின் திறனற்ற நடவடிக்கையால் விபரீதம்- கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன்...

கோவை: ஓடும் ரயிலில் பயணச்சீட்டு பரிசோதகர் ஒருவரை பயணி தள்ளியதில் பயணச்சீட்டு பரிசோதகர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ரயில்வே துறையின் திறனற்ற நடவடிக்கையை சீர் செய்து, இதுபோன்ற இழப்புகளை தடுக்க வேண்டும் என ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிற்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கடிதம் எழுதியுள்ளார்.


அதில், கடந்த ஏப்.2 ஆம் தேதியன்று எர்ணாகுளம் – பாட்னா விரைவு ரயிலில், ரயில்வே பயணச்சீட்டு பரிசோதகராக வினோத் என்பவர் பணியிருந்தார். அப்போது பயணச்சீட்டு இல்லாத பயணி ஒவவரால் ஓடும் ரயிலிலிருந்து வெளியே தள்ளிவிட்டதால் வினோத் உயிரிழந்துள்ளார். இது ஒட்டுமொத்த ரயில்வே ஊழியர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. 
இந்த துயர சம்பவம் ஏதோ துரதிருஷ்டவசத்தால் நடந்தது அல்ல. மாறாக, ஏற்கனவே ரயில்வே நிர்வாகமும், ரயில்வே வாரியமும் உருவாக்கி வைத்துள்ள பாதுகாப்பு வழிகாட்டுதல்களை நிர்வாகம் முறையாக கடைபிடிக்காததால் தான் நடந்தது என்று தட்சிண ரயில்வே எம்பிளாய்ஸ் யூனியன் (டி.ஆர்.இ.யு) அம்பலப்படுத்தியுள்ளது. 
 

இதுகுறித்து தென்னக ரயில்வே நிர்வாகத்திற்கும், ரயில்வே வாரியத்திற்கும் டிஆர்இயு கடிதம் எழுதியுள்ளது. பயணச்சீட்டு பரிசோதகர்களுக்கு தங்கள் பணியின்போது, 3 படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கு மேல் பணி தருவது என்பது அதிக பணிசுமையை தரும் என்பதோடு, ரயில்வே வாரியம் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முற்றிலும் எதிரானதாகும். மேலும், கேரளாவிலிருந்து இயக்கப்படும் ரயில்களில் முன்பதிவில்லா ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் அதிக கூட்டம் நிலவும் சூழலில் சில பயணிகள், முன்பதிவு பெட்டிகளுக்குள் ஏறிவிடுவது தவிர்க்க இயலாத ஒன்றாக மாறி வருகின்றது. 

இச்சூழலில் இயல்பாகவே அப்பயணிகளுக்கும், பயணச்சீட்டு பரிசோதகர்களுக்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவாகிறது.
அத்தகைய சூழலில் அப்பயணிகளிடம் கூடுதல் கட்டணம் பெற்றுக்கொண்டு, அவர்களை முன்பதிவு பெட்டியிலேயே தொடர்ந்து பயணிக்க அனுமதிக்க வேண்டும். இதனால் ரயில்வே நிர்வாகத்திற்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். பயணச்சீட்ட பரிசோதனை செய்யும்போது, போதுமான எண்ணிக்கையில் ரயில்வே பாதுகாப்புப்படை காவல் துறையினர் பணியில் இருப்பதில்லை. ஏராளமான இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால் ரயில்வே பாதுகாப்பு படையினர் போதுமான எண்ணிக்கையில் பணியில் ஈடுபடுத்த முடிவதில்லை. 

எனவே, மேற்சொன்ன விஷயங்களை பரிசீலித்து, முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது. அதிக பணிச்சுமையை குறைக்க ரயில்வே வாரியத்தில் வழிகாட்டுதல்களுக்குட்பட்டு பணி அளிக்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பி, ஊழியர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe