கோவையில் சந்தேகத்திற்குரிய பணப்பரிவர்த்தனைகள் குறித்து வங்கியாளர்கள் மற்றும் அமலாக்கத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம்...

published 10 months ago

கோவையில் சந்தேகத்திற்குரிய பணப்பரிவர்த்தனைகள் குறித்து வங்கியாளர்கள் மற்றும் அமலாக்கத்துறை அலுவலர்களுடன்  ஆய்வுக்கூட்டம்...

கோவை: பாராளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு சந்தேகத்திற்குரிய பணப்பரிவர்த்தனைகள் குறித்து வங்கியாளர்கள் மற்றும் புலனாய்வு பிரிவு, மத்திய மாநில கலால் பிரிவு, வருமானவரித்துறை உள்ளிட்ட அமலாக்கத்துறை அலுவலர்களுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கோயம்புத்தூர் செலவின பார்வையாளர்களான கீது படோலியாய், உம்மே ஃபர்டினா அடில் மற்றும் பொள்ளாச்சி செலவின பார்வையாளர்களான ஆஷிஷ் குமார், சௌரப் குமார் ராய், நீலகிரி செலவின பார்வையாளரான சந்தீப் மிஸ்ரா ஆகியோர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

 

இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி, பொள்ளாச்சி தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, வட்டாட்சியர்(தேர்தல்) தணிகைவேல் மற்றும் வங்கியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் இந்தியத்தேர்தல் ஆணையத்தின் 2024 நடைபெறவுள்ளதையொட்டி வழிகாட்டுதலின்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் தேர்தல் பணிகள் மாவட்ட நிர்வாகத்தால் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் உள்ளதால், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வங்கிகள் மூலம் செய்யப்பட்ட சந்தேகத்திற்கிடமான பண பரிவர்த்தனைகள் தொடர்பாக வங்கியாளர்களுடனான
ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

வங்கிகளில் வழக்கத்திற்கு மாறாக மற்றும் சந்தேகத்திற்கிடமான முறையில் பணம் எடுத்தல், கடந்த இரண்டு மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட டெபாசிட் அல்லது திரும்பப் பெறுதல், ஒரு வங்கிக் கணக்கிலிருந்து பலரின் கணக்குகளுக்கு RTGS மூலம் வழக்கத்திற்கு மாறான பணப் பரிமாற்றம், மாவட்டம் தொகுதியில் உள்ள நபர்கள் அத்தகைய இடமாற்றத்தின் முன்மாதிரி இல்லாமல். ரொக்கமாக ஏதேனும் வைப்புத்தொகை செலுத்துதல், பணம் எடுத்தல், தலைமை நிர்வாக அதிகாரியின் இணையதளத்தில் கிடைக்கும் வேட்பாளர்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, வேட்பாளர்கள் / மனைவி / அவரைச் சார்ந்தவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து 1 லட்சம், ரொக்கம் திரும்பப் பெறுதல் மற்றும் ரொக்கமாக வைப்பு, வாக்காளர்களுக்கு கொடுக்கப் பயன்படுத்தப்படும் சந்தேகத்திற்கிடமான பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

மேலும் சந்தேகத்திற்கிடமான பணப் பரிவர்த்தனைகள் மூலம் அந்த பணம்
வாக்காளர்களுக்கு கொடுக்கப் பயன்படுத்தப்படலாம் என்று சந்தேகம் இருந்தால் வங்கிகள் அதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள பறக்கும் படைக்கு தகவல் அளிக்கலாம்.

சரியான சரிபார்ப்புக்குப் பிறகு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இருப்பினும், ரொக்க வைப்புத் தொகை அல்லது திரும்பப் பெறுதல் தொகை ரூ.10 இலட்சம் இருந்தால், வருமானத்தின் கீழ் தேவையான நடவடிக்கை எடுப்பதற்காக, வருமான வரித் தகவல் அனுப்பப்படும்.

இக்கூட்டத்தில்
சந்தேகத்திற்கிடமாக
பரிவர்த்தனைகள்
செய்யப்படுகின்றனவா என்பதனை தொடர்ந்து முறையாக கண்காணித்திட
வேண்டும் என வங்கியாளர்கள் மற்றும் அமலாக்கத்துறை அலுவலர்களுக்கு
செலவின பார்வையாளர்கள் அறிவுறுத்தினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe