குடி போதை நபர் தள்ளி விட்டதில் உயிரிழந்த டிக்கெட் பரிசோதகர்- அஞ்சலி செலுத்திய சக பரிசோதகர்கள்...

published 10 months ago

குடி போதை நபர் தள்ளி விட்டதில் உயிரிழந்த டிக்கெட் பரிசோதகர்- அஞ்சலி செலுத்திய சக பரிசோதகர்கள்...

கோவை: கடந்த செவ்வாய்க்கிழமையன்று பாட்னா எக்ஸ்பிரஸ் ரயிலில் வினோத் என்ற டிக்கெட் பரிசோதகர் பணியில் இருந்த போது, ரிசர்வு பெட்டியில் குடிபோதையில் இருந்த வட மாநில நபர் டிக்கெட் இன்றி பயணம் செய்து கொண்டிருந்துள்ளார். அவரை அன் ரிசர்வ் பெட்டிக்கு செல்லுமாறு வினோத் கூறுகையில் குடி போதையில் இருந்த நபர் அதனை மறுத்துள்ளார். 

இதனால் இருவரும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்திற்கு இடையே குடி போதையில் இருந்த நபர் வினோத்தை ரயிலில் இருந்து வெளியே தள்ளி விட்டதில் வினோத் அருகாமை தண்டவாளத்தில் விழுந்தார். அச்சமயம் அந்த தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த மற்றொரு ரயில் அவர் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் குடி போதையில் இருந்த அந்த வட மாநில நபரை பொதுமக்கள் காவல்துறையினரிடம் பிடித்து கொடுத்தனர்.

 

இந்நிலையில் கோவை ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர்கள் வினோத் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் அச்சம்பவத்திற்கு கண்டனங்களையும் பதிவு செய்தனர். இந்நிகழ்வில் அந்த வட மாநில நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வரும் காலங்களில் டிக்கெட் பரிசோதகர்களுக்கு இரயில்வே நிர்வாகம் உரிய பாதுகாப்பு வழங்கி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனவும் துப்பாக்கி ஏந்திய RPF போலிஸ் பாதுகாப்பு வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe