கோடியில் சம்பளத்தை உயர்த்திய கவின்... தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி

published 10 months ago

கோடியில் சம்பளத்தை உயர்த்திய கவின்... தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி

லிப்ட், டாடா படங்களின் வெற்றி, நடிகர் கவினை கவனிக்க வைக்கும் நடிகனாக்கியுள்ளது. தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால் படிப்படியாக உயர்ந்து இன்று தனக்கான பெயரை சம்பாதித்துள்ளவர் நடிகர் கவின்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வந்து இப்போது  தனி ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கிவிட்டார். 2017ம் ஆண்டு நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான சத்ரியன் திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தவர் கவின்.

அதன்  பிறகு பெரிதாக எந்த பட வாய்ப்பும்  அமையவில்லை. பின் அவர் தனது நடிப்பை வெளிக்காட்டும் வகையில் வந்த படங்கள் லிஃப்ட், டாடா படங்கள் தான். அதிலும் குறிப்பாக  டாடா படத்தின் கதைக்களமும் கவினின் நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் சிறந்த விமர்சனங்களை பெற்றுது. இப்படத்தின் வெற்றி கவினுக்கு தமிழ் சினிமாவில் நல்ல இடத்தை தேடி தந்துள்ளது. இவர் நடிப்பில் தற்போது  ஸ்டார் மற்றும் கிஸ் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

இந்த நிலையில், டாடா படத்தின் வெற்றியை தொடர்ந்து தன் சம்பளத்தை ரூ. 1 கோடியாக உயர்த்தினாராம் கவின். பின்னர்  இவரது சம்பளம் ரூ. 3 கோடி என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது தயாரிப்பாளர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ரூ. 7 கோடியாக உயர்த்திவிட்டார் என பிரபல பத்திரிகையாளர் ஒருவர்  பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

மேலும் டாடா எனும் ஒரு ஹிட் திரைப்படத்தை கொடுத்துள்ள கவின், அடுத்தடுத்த படங்களுக்கு மிகப்பெரிய அளவில் சம்பளத்தை உயர்த்தியுள்ளது   தயாரிப்பாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe