கோவையில் விழிப்புணர்வு பைக் பேரணி!

published 10 months ago

கோவையில் விழிப்புணர்வு பைக் பேரணி!

கோவை: தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு கோவை தொகுதியில் 100% ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, எம்.எம்.கே  குழுமத்தின் கீழ் செயல்படும் எம்.கே அறக்கட்டளை சார்பில் 'வாக்காளர் விழிப்புணர்வு வாகன பேரணி' இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக கோவை மாநகராட்சியின் துணை ஆணையர் செல்வசுரபி கலந்து கொண்டு எம்.கே குழுமத்தின் தலைவர் மணிகண்டன் முன்னிலையில் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.  

கோவை நேரு விளையாட்டு அரங்கத்தில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பேரணியில் 250 வாகன ஓட்டிகள் மற்றும் அவர்களுடன் பங்கேற்றவர்கள் என மொத்தம் 500 மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு, அவிநாசி சாலையில் அமைந்துள்ள LIC அலுவலகம் வழியே சென்று, Huzur ரோடு, ரேஸ் கோர்ஸ் வரை சென்று அங்கிருந்து மீண்டும் அதே வழியில் நேரு விளையாட்டு அரங்கத்திற்கு திரும்பினர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்வு குறித்து எம்.கே. குழுமத்தின் தலைவர்  மணிகண்டன் கூறியதாவது:

கோவையில் இதுவரை  நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் 70 சதவீகிதம் -அல்லது 75 சதவீகித வாக்கு பதிவு மட்டுமே பதிவாகின்றது.

மீதமுள்ள 25 சதவிகிதம் முதல் 30 சதவிகிதம் பேர் ஏன் வாக்களிக்க வரவில்லை என்பதை ஆராய்ந்து - அவர்களுக்கு தேர்தல் நேரத்தில் உதவிபுரிய மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து வாகன வசதிகளை இந்த ஆண்டு நமது அறக்கட்டளை சார்பாக ஏற்படுத்தி உள்ளதாகவும் ஆயினும் வாக்குகளிப்பதன் அவசியத்தை அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று இந்த விழிப்புணர்வு பேரணியை நடத்தியாக கூறினார்.

முன்னதாக அனைவரும் வாக்களிப்போம் என மனித சங்கிலியாக நின்று  உருதி மொழி எடுத்து கொண்டனர். கலந்துகொண்டவர்களுக்கு அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது .
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe