மருதமலை சென்ற பக்தர்களுக்கு நேர்ந்த சோதனை! - வீடியோ காட்சிகள்...

published 2 weeks ago

மருதமலை சென்ற பக்தர்களுக்கு நேர்ந்த சோதனை! - வீடியோ காட்சிகள்...

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/FeDW9xUn2U8AbIvNabKtk1

கோவை: தமிழ்ப் புத்தாண்டு சித்திரை திருநாளை முன்னிட்டு மருதமலையில் பக்தர் கூட்டம் அலைமோதி வருகிறது. 

பக்தர்கள் படிக்கட்டு வழியாகவும், மலைப் பாதை வழியாகவும், கோயில் பேருந்து மூலமாகவும் சென்று தரிசனம் செய்வது வழக்கம். 


இந்நிலையில் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு தண்ணீர் தேடி நேற்று 14 யானைகள் கொண்ட கூட்டம் படிக்கட்டு பாதையில் முகாமிட்டது. இதனால் நேற்று அந்த வழியாக செல்லும் பக்தர்களுக்கு வனத் துறையினர் தடை விதித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

அதனை தொடர்ந்து இன்று பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதனிடையே மருதமலையில் யானைகள் உலாவிய காட்சிகள் வைரலாகி வருகின்றன.


 

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…


https://youtu.be/jS7GrvOJpME?si=cYVaVaXHLFQrZdA0


சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw