கோவையில் 1192 மது பாட்டில்கள், ரூ. 1.07 லட்சம் பறிமுதல்- 11 பேர் கைது…

published 10 months ago

கோவையில் 1192 மது பாட்டில்கள், ரூ. 1.07 லட்சம் பறிமுதல்- 11 பேர் கைது…

கோவை: மக்களவை தேர்தலையொட்டி கடந்த 17ம் தேதி, நேற்று, நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனை பயன்படுத்தி சிலர் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. 

இதனை தொடர்ந்து மாநகர போலீசார், மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் கோவை மாநகரில் நேற்று பல்வேறு இடங்களில் சோதனை செய்தனர். வடவள்ளி வீரகேரளம் டாஸ்மாக் கடை அருகே சென்ற போது ஒரு கும்பல் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடினர். போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து ஒரு குவார்ட்டர் பாட்டில் ரூ. 250 முதல் 300 வரை விற்றது தெரியவந்தது. 

இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பார் சப்ளையர்கள் சிவகங்கையை சேர்ந்த ராஜா(28), மருதுபாண்டி(27), விருது நகரை சேர்ந்த தமிழ்செல்வன்(27), புதுக்கோட்டையை சேர்ந்த செபாஸ்டியன்(42), கிருஷ்ணன்(41), ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 844 மது பாட்டில்கள் மற்றும் ரூ.1.07 லட்சத்தை பறிமுதல் செய்தனர். 

இதேபோல, போத்தனூர், சுந்தராபுரம், சிங்காநல்லூர், பீளமேடு மற்றும் மது விலக்கு அமல்பிரிவு போலீசார் புதுக்கோட்டையை சேர்ந்த விக்னேஷ்வரன்(31), வீரசேகரன்(42), அன்புகுமார்(44), மகாலிங்கம்(27), கடலூரை சேர்ந்த சுகுமார்(29), கோவை பிள்ளையார் புரத்தை சேர்ந்த அன்புதுரை(32), ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 348 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் போலீசார் 11 பேரை கைது செய்து 1192 மதுபாட்டில்கள் மற்றும் ரூ. 1.07 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe