ஒரே கண்ணாலே... புடவையில் மின்னும் கீர்த்தி சுரேஷ்!

published 9 months ago

ஒரே கண்ணாலே... புடவையில் மின்னும் கீர்த்தி சுரேஷ்!

நடிகை  கீர்த்தி சுரேஷ் சேலையில்  அழகாக போஸ் கொடுத்தபடி நடத்தியுள்ள போட்டோஷூட் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகை கீர்த்தி சுரேஷு ‘இது என்ன மாயம்’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர்.  இதையடுத்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த ரஜினிமுருகன் மற்றும் ரெமோ ஆகிய படங்கள் ஹிட் ஆனதால் மக்கள் மத்தியில் பிரபலம்  ஆனார்.

தனுஷுக்கு ஜோடியாக தொடரி, விக்ரமுடன் சாமி ஸ்கொயர், விஜய்க்கு ஜோடியாக பைரவா மற்றும் சர்க்கார், சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் என டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.  

பின்னர் அவருக்கு தெலுங்கு படங்களிலும் நடிக்க வாய்ப்பு வந்தது. தெலுங்கில்  நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான மகாநடி படத்தில் நடித்ததற்காக நடிகை கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.

தற்போது பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்துள்ளார். இந்தியில் வருண் தவானுக்கு ஜோடியாக அவர் நடிக்கும் முதல் படம் பேபி ஜான். இப்படத்தை இயக்குனர் அட்லீ தயாரிக்கிறார்.  பேபி ஜான் திரைப்படம் தமிழில் விஜய் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன தெறி படத்தின் ரீமேக்.  இப்படத்தில் சமந்தா  கேரக்டரில்  இந்தியில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஷங்கர் மகள் திருமணத்தில் கலந்துகொண்டபோது அணிந்திருந்த சேலையில்   போட்டோஷூட்  நடத்தி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.  இந்த க்யூட்  புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe