நடிகை தமன்னாவுக்கு போலீசார் சம்மன்! நேரில் ஆஜராக உத்தரவு!

published 9 months ago

நடிகை தமன்னாவுக்கு போலீசார் சம்மன்! நேரில் ஆஜராக உத்தரவு!

சென்னை: நடிகை தமன்னாவுக்கு மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீசார் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளனர்.

தமிழ் சினிமாவின் முக்கிய கதாநாயகியான தமன்னா பல்வேறு மொழிப்படங்களிலும் நடித்து வருகிறது.

இதனிடையே கடந்த 2023ம் ஆண்டு ஐ.பி.எல்., போட்டிகளை சட்டவிரோதமாக நேரலை செய்ததாக தனியார் மொபைல் ஆப் மீது புகார் எழுந்தது. இதனால் தனியார் நிறுவனம் கோடிக்கணக்கில் இழப்பைச் சந்தித்ததாகவும் தெரிகிறது.

தொடர்பான வழக்கில் தமன்னாவுக்கு மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். வரும் 29ஆம் தேதி தமன்னா நேரில் ஆஜராகுமாறு அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe