கோவையில் முக்கிய சந்திப்பில் அமைகிறது 'மினி' ரவுண்டானா

published 1 week ago

கோவையில் முக்கிய சந்திப்பில் அமைகிறது 'மினி' ரவுண்டானா

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/Gymsw6mPrOK0fU2lrUKwUs

கோவை: கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக முக்கிய சாலைகளில் உள்ள சிக்னல்கள் அகற்றப்பட்டு ‘யு டர்ன்’ அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சாலையை கடக்க மட்டும் ஒரு சில இடங்களில் சிக்னல் அமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல லாலி ரோடு, வடகோவை சிந்தாமணி, புரூக்பாண்ட் ரோடு ஆகிய இடங்களில் சிக்னல்கள் அகற்றப்பட்டு அங்கு ரவுண்டான அமைக்கப்பட்டது.


இதனால் போக்குவரத்து நெரிசல் குறைந்து, சிக்னலில் காத்திருக்கும் நேரமும் குறைந்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து மேலும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கூடுதல் இடங்களில் ‘யு டர்ன்’ மற்றும் ரவுண்டான அமைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி கோவை புலியகுளம் விநாயகர் கோவில் அருகே புலியகுளம் ரோடு, ரெட்பீல்டு ரோடு சந்திப்பு உள்ளது. இந்த சாலை சந்திப்பில் காலை, மாலை நேரங்களில் அதிக அளவு வாகனங்கள் சென்று வருகின்றன.


இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனை குறைக்க மாநகர போக்குவரத்து போலீசார் தற்போது அங்கு மினி ரவுண்டானா அமைத்துள்ளனர். அதனால் சிறிது அளவு போக்குவரத்து நெரிசல் கட்டுக்குள் வந்துள்ளது.

இது வாகன ஓட்டிகளிடையே வரவேற்பபை பெற்றுள்ளது.





சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw