கோவையில் ரூ.30,000 சம்பளத்தில் வேலை.. விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி!

published 9 months ago

கோவையில் ரூ.30,000 சம்பளத்தில்  வேலை.. விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி!

கோவையில்  செயல்பட்டு வரும் கரும்பு ஆராய்ச்சி மையத்தில் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் கோவையில் உள்ள கரும்பு ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு இளநிலை உதவியாளர் (Young Professional -I) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளி வந்துள்ளது. மொத்தம் 2 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.   இதற்கு விண்ணப்பிக்க 26.04.2024 கடைசி நாள் ஆகும். மாதம் சம்பளம்: ரூ. 30,000

கல்வி

தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல், ஏஐ போன்ற ஏதாவதொரு பிரிவு படித்திருக்க வேண்டும். 
ஆங்கில தட்டச்சு  திறன் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது

21 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு

இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.  தற்காலிக நியமனம் அடிப்படையில் இந்த பணியிடங்கள்  நிரப்பப்பட உள்ளன.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://sugarcane.icar.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 26.04.2024. நேர்முகத் தேர்வு நடைபெறும்  26.4.2024 அன்று நடைபெறும்.

மேலும் விவரங்கள்

இது தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://sugarcane.icar.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தை    பார்வையிடவும்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe