அசரடிக்கும் அழகில் மடோனா செபாஸ்டியன்... கலக்கல் போட்டோஸ்!

published 9 months ago

அசரடிக்கும் அழகில் மடோனா செபாஸ்டியன்... கலக்கல் போட்டோஸ்!

தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து திரையுலகில் பிரபலமான  மடோனா செபாஸ்டியன்,  2015-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான  ப்ரேமம் திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர்.  

பிரேமம் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். கடைசியாக நிவின் பாலிக்கு ஜோடியாக மாறும் மடோனாவை தங்களது  கிரஷ் என கொண்டாடினர். இவருக்கு இத்திரைப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினை சைமா  வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து  தமிழிலும் பிரபலமானார்.  தமிழில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக காதலும் கடந்து போகும் படத்தில்   நடித்து ரசிகர்கள் மத்தியில் இடத்தைப் பிடித்தார். தொடர்ந்து கவண், ப. பாண்டி, ஜுங்கா, வானம் கொட்டட்டும், கொம்பு வச்ச சிங்கம்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக காதலும் கடந்துபோகும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார்.

மலையாள சினிமாவிலும் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தில்,   லியோ தாஸின் தங்கை எலிசாவாக மடோனா செபாஸ்டியன் நடித்தது  ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.  அதிலும்  'நா ரெடிதான் வரவா'  பாடலில் நடனத்தில் பட்டையை கிளப்பி இருப்பார்.

இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் ஃபலோவர்களை கொண்டுள்ள நடிகை மடோனா செபாஸ்டியன்   தற்போது 
லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு  ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். தற்போது இவை  இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe