கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை உடனடியாக ஒதுக்கி தரக் கோரிக்கை- கோவையில் இலங்கை தமிழர்கள் மனு...

published 9 months ago

கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை உடனடியாக ஒதுக்கி தரக் கோரிக்கை- கோவையில் இலங்கை தமிழர்கள் மனு...

கோவை: கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை உடனடியாக ஒதுக்கி தரக்கோரி இலங்கை தமிழர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டூர் பகுதியில் இலங்கை அகதிகள் முகாமில் 217 குடும்பங்கள் கடந்த 2000 ஆண்டு முதல் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் அரசு உத்தரவின் படி அவர்கள் வசித்து வந்த கோட்டூர் பகுதியில் உள்ள முகாமிடத்தை சீரமைத்து மொத்தம் 112 வீடுகள் கட்டப்பட்டன. இந்த நிலையில் அங்கு வசித்து வந்த இலங்கை அகதிகள் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தனர் இந்த நிலையில் தற்பொழுது 12 குடும்பங்களுக்கு மட்டும் அங்கு கட்டப்பட்டிருந்த வீடுகள் ஒதுக்கி தரப்பட்டுள்ளது. மீதம் இருந்த 15 குடும்பங்களுக்கு ஆழியார் பகுதியில் வீடுகள் கட்டப்பட்டது. 

 

தற்பொழுது அதன் திறப்பு விழாவும் முடிவடைந்து விட்டது. இந்த நிலையில் அந்த 15 குடும்பங்களுக்கும் அந்த வீடுகள் ஒதுக்கி தரப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதற்கு மின்சார வசதி செய்யவில்லை என்பது போன்ற பல காரணங்களை கூறுகின்றனர் எந்த நிலையில் அந்த 15 குடும்பங்களை சேர்ந்தவர்கள் கோவை மாவட்ட ஆட்சியிடம் மனு அளித்துள்ளனர். 

அதில் தற்பொழுது தாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருவதால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றோம் மேலும் இரண்டு மாதத்திற்குள் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது உடனடியாக வீட்டை ஒதுக்கி தந்தால் தான் தங்களுடைய குழந்தைகளை கோட்டூர் பகுதியில் இருந்து ஆழியாறு பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு கொண்டு சேர்த்து விட முடியும் அவருடைய கல்வி செலவையும் எங்களுடைய குடும்ப செலவுகளையும் சிரமம் இன்றி நடத்துவதற்கு வாய்ப்பாக இருக்கும் எனவே தங்களுக்கு உடனடியாக அங்கு கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளை ஒதுக்கி தரவேண்டும் மேலும் அடிப்படை வசதிகளையும் உடனடியாக செய்து கொடுக்க வேண்டுமென அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe