இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் ராகிங் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

published 2 years ago

இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் ராகிங் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில், கல்லூரி மாணவிகள் மத்தியில் ராகிங் தடுப்பு குறித்தான  விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது, இதில் காட்டூர் காவல் நிலைய ஆய்வாளர் லதா சிறப்புரையாற்றினார்

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில், கல்லூரியின் வணிக மேலாண்மையியல் துறைத்தலைவர் முனைவர்  ஜெயந்தி  வரவேற்புரையாற்றினார்,  கல்லூரி முதல்வர் முனைவர் சித்ரா தலைமை தாங்கினார், இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் காட்டூர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் லதா அவர்கள் கலந்து கொண்டு மாணவிகள் மத்தியில் பேசும்போது, ராகிங்க்கு  எதிரான சட்ட நடவடிக்கைகள் பற்றியும் மகளிர் பாதுகாப்பு, இணைய வழிக் குற்றங்களைத் தவிர்க்கும் வழிகள், காவல்துறை உதவிகள் பற்றியும் பேசினார்.

இதனைத் தொடர்ந்து வழக்கறிஞரும் மனித உரிமைச் செயல்பாட்டாளருமான கரீம் நிகழ்ச்சியில் பேசும்போது ராகிங் தடுப்பு விழிப்புணர்வின் தேவை, பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்துக் கூறியதோடு பலவிதப் போராட்டங்கள், தியாகங்களுக்குப் பிறகு பெற்ற கல்வி உரிமையை இளைய சமுதாயம் வீணாக்கி விடக் கூடாது என்று வலியுறுத்தினார், இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் கணினி அறிவியல் துறை இணைப்பேராசிரியர் முனைவர் ராணி அனைவருக்கும் நன்றிகளை  தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe