கோவையில் கணவனை கொலை செய்த வழக்கு- மனைவி, கள்ளக்காதலன் இருவருக்கும் ஆயுள் தண்டனை...

published 9 months ago

கோவையில் கணவனை கொலை செய்த வழக்கு- மனைவி, கள்ளக்காதலன்  இருவருக்கும் ஆயுள் தண்டனை...

கோவை- கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் வசித்த அமுதா (36) மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் (32) ஆகியோர் இருவரும் அவர்களது திருமணம் கடந்த உறவுக்கு இடையூறாக இருந்த அமுதாவின் கணவரான நாகராஜ் (35) என்பவரை  கடந்த 2021-ம் ஆண்டு மேற்படி இருவரும் கொலை செய்த குற்றத்திற்காக  மதுக்கரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

இவ்வழக்கின் விசாரணை கோவை மாவட்டம் 1-வது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்று கொலை குற்றவாளிகளான அமுதா (36) மற்றும் சங்கர் (32) ஆகியோர்களுக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.6000/- அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன் விசாரணை மேற்கொண்ட புலன் விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற தலைமைக் காவலர் ஆனந்தகுமார் ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பாராட்டினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe