சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் அறிவிப்புக்கு காட்மா சங்கம் வரவேற்பு

published 2 years ago

சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் அறிவிப்புக்கு காட்மா சங்கம் வரவேற்பு

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :  https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE

கோவை: சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொழில்துறைக்காக வெளியிட்ட அறிவிப்புகளுக்கு கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்கம் (காட்மா) வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற குறு சிறு தொழில் துறை மானிய கோரிக்கையின் பொழுது, தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்த அறிவிப்புகளில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்காக, தமிழக அரசு வங்கிகளின் மூலமாக 100 கோடி கடன் வழங்கப்படுவதையும், அகில இந்திய அளவில் தொழில் துறையில் மூன்றாம் இடத்தில் இருக்கும் தமிழகத்தை முதலிடத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறியிருப்பதையும் வரவேற்கிறோம்.

தொழில் நகரமான கோவையில் தமிழக அரசின் சார்பில் புதிதாக தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட வேண்டும், தொழில் முனைவோருக்கு மின்கட்டண சலுகைகள் வழங்கப்பட வேண்டும் ஆகிய தொழில் முனைவோர்களது நீண்ட நாள் கோரிக்கைகள் குறித்த அறிவிப்புகள் எதுவும் இடம் பெறவில்லை. தமிழக அரசு தொழிற்பேட்டை மற்றும் தொழில் முனைவோருக்கான மின் கட்டண சலுகைகள் குறித்த கோரிக்கைகள் எதிர் வரும் காலங்களிலாவது நிறைவேற்றப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்..

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe