இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு: 12ம் வகுப்பு தகுதி.. ரூ. 40,000 வரை சம்பளம்!

published 9 months ago

இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு: 12ம் வகுப்பு தகுதி..  ரூ. 40,000 வரை சம்பளம்!

இந்திய கடற்படையில் (Indian Navy) அக்னிவீர் திட்டத்தின் ( Agniveer (SSR) ) கீழ் ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள்  ஆன்லைன் மூலம்  விண்ணப்பிக்கலாம்.

கல்வி

இந்த  பணிகளுக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  12 ஆம் வகுப்பில் குறைந்தது 50 சதவீதம் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.

வயது

1.11.2003 to 30.04.2007 தேதிக்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

சம்பளம்

இந்த  பணிகளுக்கு ரூ. 30,000 முதல் ரூ. 40,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்

Agniveer (SSR) பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம்  விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்  ரூ.550. ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி 13.05.2024 ஆகும்.  கடைசி தேதி :27.05.2024.

தேர்வு

எழுத்து தேர்வு, PFT,  Medical Test மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  

மேலும் விவரங்கள்

அக்னிவீர் திட்டத்தின்  கீழ் ஆட்சேர்ப்பு குறித்த மேலும் தகவல்களை அறிந்து கொள்ள https://www.joinindiannavy.gov.in/files/Advt_Agniveer_SSR_02_24_English.pdf என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe