சிங்காநல்லூர் காரர்களுக்கும் இனி ஜாலி தான்!

published 9 months ago

சிங்காநல்லூர் காரர்களுக்கும் இனி ஜாலி தான்!

கோவை: வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், கோவையில் சிக்னல்களில் பசுமைப்பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி சிங்காநல்லூர் சிக்னலிலும் இந்த பசுமைப்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பல்வேறு மாவட்டங்களிலும் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி  வெப்பம் பதிவாகி மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

நம்ம குளுகுளு கோவை கடந்த சில ஆண்டுகளாகவே 'ஹாட்டாக' இருந்து வந்தது. இந்தாண்டு இன்னும் உக்கிரமாக 100 டிகிரி -பாரன்ஹீட் வெப்பம் சர்வ சாதாரணமாக கோவை மக்களை வெளுத்து வாங்கி வருகிறது.

வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு அரசு மற்றும் மருத்துவர்கள் பல்வேறு அறிவுறுத்தி வருகின்றனர். பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர், நீர்மோர் பந்தல்களில் மக்கள் தாகம் தணித்து வருகின்றனர்.

வெயிலில் குறிப்பாக வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். 
இந்நிலையில் கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மாநகராட்சி பகுதிகளில் வெயில் அதிகமாக இருக்கக்கூடிய சிக்னல்களில் வாகன ஓட்டிகளுக்காக பசுமை பந்தல் அமைக்கும் பணியை துவக்கி உள்ளது.

கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் கண்ணப்பன் நகர் சிக்னலில் முதல் கட்டமாக இந்த பசுமை பந்தல் அமைக்கப்பட்டது.

முதல் கட்டமாக 10 இடங்களில் இதனை அமைக்க உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்த நிலையில் சிங்காநல்லூர் சிக்னலிலும் இந்த பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

மேம்பாலம், தரமான சாலைகள், பொழுதுபோக்கு அம்சங்கள், ஸ்மார்ட் திட்டத்தில் குளம் மறு சீரமைப்பு என எத்தனையோ விஷயங்கள் கேட்டுக்கேட்டுக் கிடைக்காத சிங்காநல்லூர் மக்களுக்கு இந்த பசுமைப்பந்தலாவது கிடைத்துள்ளது என்று கூறிக்கொள்ளலாம்.

இந்த பசுமைப்பந்தல் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சற்றே வெயிலின் தாக்கத்தில் இருந்து விடை தருகிறது. இதற்காக மாநகராட்சி நிர்வாகத்திற்கு மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe