ஊட்டி, கொடை., போகனுமா? இ-பாஸ் பெற பிரத்யேக இணையதளம் வெளியீடு!

published 9 months ago

ஊட்டி, கொடை., போகனுமா? இ-பாஸ் பெற பிரத்யேக இணையதளம் வெளியீடு!

கோவை: கொடைக்கானல் மற்றும் நீலகிரி மாவட்டம் செல்வற்கு சுற்றுலாப்பயணிகள் இ-பாஸ் பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான பிரத்யேக இணையதளத்தை  நீலகிரி மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

நீலகிரி மற்றும் கொடைக்கானலில் ஏற்பட்டுள்ள பார்க்கிங், தங்கும் விடுதி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இரு இடங்களுக்கும் செல்ல இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, இரு இடங்களுக்கும் பேருந்தில் செல்ல இ-பாஸ் தேவை இல்லை என்றும், வாகனங்களுக்கு மட்டுமே இ-பாஸ் தேவை என்றும் தமிழக அரசு அறிவித்தது.

இதனிடையே, இ-பாஸ் பெற தனியாக இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. http://epass.tnega.org என்ற இந்த இணையதள பக்கத்தில் பொதுமக்கள் தங்கள் விவரங்களை உள்ளீடு செய்து விண்ணப்பித்து இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

மே 7ம் தேதி முதல் நீலகிரி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், மே 6ம் தேதி காலை 6 மணி முதல் இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe