அமெரிக்காவில் சுற்றும் ஆண்ட்ரியா! மலை மீது க்யூட் போஸ்!

published 1 week ago

அமெரிக்காவில் சுற்றும் ஆண்ட்ரியா! மலை மீது க்யூட் போஸ்!

நடிகையும், பாடகியுமான  ஆண்ட்ரியா, அமெரிக்காவில் உள்ள கேண்டி மலையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

கெளதம் மேனன் இயக்கிய  பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை  ஆண்ட்ரியா. பின்னர் இவருக்கு சினிமாவில் பாடவும் வாய்ப்பு கிடைத்தது. தனது அசத்தலான பாடல்கள் மற்றும் நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.





வட சென்னை, அரண்மனை, துப்பறிவாளன் உள்ளிட்ட படங்களில் தனது   சிறந்த நடிப்பை  வெளிப்படுத்தி உள்ளார்.  இவர்  நடிகைகளுக்கும் டப்பிங் செய்து வருகிறார். மேலும் இசை கச்சேரிகளை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நிகழ்த்தி வருகிறார்.  தற்போது இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் பிசாசு 2  படத்தில் ஹீரோயினாக  நடித்து வருகிறார்.  




சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர்,  இன்ஸ்டாகிராமில் 3 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்ஸ்களை  கொண்டுள்ளார். அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவார்.





அந்த வகையில்  தற்போது அமெரிக்காவில் உள்ள கேண்டி மலையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில்  பகிர்ந்துள்ளார். இதில் கருப்பு நிற உடை அணிந்து, ஸ்டைலாக கண்ணாடியுடன் போஸ் கொடுத்துள்ளார். 


சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw