கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர்- வீடியோ காட்சிகள் உள்ளே...

published 9 months ago

கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர்- வீடியோ காட்சிகள் உள்ளே...

கோவை: காவல் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் மத்திய சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் கோவை மத்திய சிறையில் போலீசார் தாக்கியதில் சவுக்கு சங்கரின் வலது கை முறிவு ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் மனு தாக்கல் செய்திருந்தார்.

நேற்று நீதிமன்றம் சிகிச்சைக்காக உத்தரவை பிறப்பித்தது. இந்த சூழலில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சவுக்கு சங்கரை கோவை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து வந்தனர். வலது கையில் முறிவு ஏற்பட்டதா?? எந்த மாதிரி காயம் உள்ளது ?என முதலில் அவருக்கு ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே செய்யப்பட்டது. தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு பரிசோதனை முடித்துவிட்டு போலீசார் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் ஐந்து நாட்கள் சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/TtuRHRr2Af0

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe