கோவையில் இத்தனை பள்ளிகளில் 100% தேர்ச்சியா..!

published 9 months ago

கோவையில் இத்தனை பள்ளிகளில் 100% தேர்ச்சியா..!

கோவை: 10ம் வகுப்பு பொது தேர்வுகள் கடந்த 26.03.24 துவங்கி 08.04.24 அன்று முடிவடைந்த நிலையில் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது.நடந்து முடிந்த தேர்வில் மாணவர்கள் 4,47,203 பேரும் மாணவிகள் 4,47,203 என மொத்தம் 8,94,264 பேர் தேர்வு எழுதிய நிலையில் 8,18,743 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 

மாணவர்களை விட 5.95 % மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும் மாற்று திறனாளிகள் 13510 தேர்வு எழுதிய நிலையில் 12491 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.முதல் மூன்று இடங்களை அரியலூர்,
சிவகங்கை,
ராமநாதபுரம் பெற்றுள்ள நிலையில் கோவை மாவட்டம் 94.01% பெற்று 12வது இடத்தை பிடித்துள்ளது. 

கோவை மாவட்டத்தில் 19614 மாணவர்களும் 20126 மாணவிகள் என 39740 பேர் தேர்வு எழுதிய நிலையில் 37360 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.கடந்த ஆண்டு 13வது இடத்தில் இருந்த கோவை மாவட்டம் ஒருபடி முன்னேறி 12 இடத்தை பிடித்துள்ளது.இதில் கோவை மாவட்டத்தில் செயல்படும் பள்ளிகளில் 190 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe