வித்தியாசமான லுக்கில் ஜோதிகா.. லேட்டஸ்ட் போட்டோஸ்!

published 9 months ago

வித்தியாசமான லுக்கில் ஜோதிகா.. லேட்டஸ்ட் போட்டோஸ்!

நடிகை ஜோதிகா வித்தியாசமான லுக்கில்  கலக்கும்  புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.  

தமிழ் சினிமாவில் 90களில் ரசிகர்கள் கொண்டாடிய நடிகைகளில் ஒருவர்  ஜோதிகா.  1999ம் ஆண்டு வெளியான 'பூவெல்லாம் கேட்டுப்பார்' படத்தில் சூர்யா - ஜோதிகா  முதன் முதலாக இணைந்து நடித்தனர். தொடர்ந்து இந்த ஜோடி உயிரிலே கலந்தது, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், மாயாவி உள்ளிட்ட திரைப்படங்களில்   இணைந்து நடித்தனர். இருவருக்கும் காதல் மலர்ந்தது.

நடிகை ஜோதிகள் பல முன்னணி ஹீரோக்களுடன் படத்தில் இணைந்து நடித்துள்ளார்.  ஆனால் 2006ம் ஆண்டு சூர்யாவுடன் திருமணம் ஆன பின்னர் படங்களில் நடிக்கவில்லை.

திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்து ஜோதிகா  விலகி இருந்தார். பின் 36 வயதினிலே திரைப்படம் மூலம் மீண்டும் ரீ- என்ட்ரி கொடுத்தார்.  தொடர்ந்து காற்றின் மொழி, பொன்மகள் வந்தாள், நாச்சியார், மகளிர் மட்டும் போன்ற  படங்களில் நடித்தார்.  

மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக 'காதல் தி கோர்' மற்றும் அஜய் தேவ்கன் ஜோடியாக பாலிவுட்டில் 'ஷைத்தான்' படத்திலும் நடித்திருந்தார்.  அவரது படங்களுக்கு அவரே டப்பிங் பேசியும் வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் ஃபலோவர்களை கொண்டுள்ள இவர், அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிடுவார். அந்த வகையில் வித்தியாசமான லுக்கில் கலக்கும் அழகிய  புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe