கோவையில் கல்வி சார்ந்த மூன்றடுக்கு குழு கூட்டம்...

published 9 months ago

கோவையில் கல்வி சார்ந்த மூன்றடுக்கு குழு கூட்டம்...

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கல்வித்துறை சார்ந்த மூன்றடுக்கு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்ரின் சரண்யா, முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி உட்பட மாவட்ட கல்வி அலுவலர்கள், சமூக நலத்துறை அலுவலர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், சுகாதாரத்துறை அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் 2023-24 கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் உயர்கல்வியில் சேர்வதை உறுதி செய்தல் வேண்டும் என்றும் நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத மற்றும் பொதுத்தரவில் உள்ள 5,662 குழந்தைகளை கிராமம் வாரியாக பெற்றோர்கள் மற்றும் மாணாக்கர்களை நேரடியாக அனைத்து துறை அலுவலர்களும் சந்தித்து அவர்களுக்கு ஊக்கம் அளித்து கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து பள்ளிக்கு வரச் செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்விற்கு வருகை புரியாத மாணாக்கர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைத்து அவர்களுக்கு
சிறப்பு பயிற்சி அளித்து அவர்களை எதிர்வரும் துணை தேர்வில் பங்கேற்கச் செய்ய
உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் துறை அலுவலர்களுக்கு
அறிவுறுத்தப்பட்டது.


மேலும், மாணவர்கள் இடைநிற்றலை தவிர்த்து தொடர்ந்து கல்வி கற்க தேவையான நடவடிக்கைகளை துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் இடைநிற்றல் அவர்களை சமூகத்திற்கு எதிரான செயல்கள் செய்ய தூண்டும் எனவும் மேலும் போதைப் பொருள் தீமைகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என துறை
அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe