தொண்டாமுத்தூர் பகுதியில் 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்- பெண்கள் உட்பட 6பேர் கைது...

published 9 months ago

தொண்டாமுத்தூர் பகுதியில் 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்- பெண்கள் உட்பட 6பேர் கைது...

கோவை: கோவை தொண்டாமுத்தூர் காவல் நிலைய பகுதியில் உயர் ரக போதை பொருள் விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த ரகசிய தகவலின்  அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், உத்தரவின்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு தொண்டாமுத்தூர் முட்டிப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பாக்கு செட்டில் சோதனை செய்த போது சுமார் 10 கிராம் அளவுள்ள உயர் ரக போதை பொருள் அடங்கிய 70 பிளாஸ்டிக் குப்பிகள்  கண்டுபிடிக்கப்பட்டன. மேற்கொண்டு விசாரணை செய்ததில் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த நூர்ஜஹான் இஸ்மாயில் மனைவி ஆஷ்மா கா துன் (40)  , இத்ரிஷ் அலி மனைவி ஜஹீரா கா துன்(29), எசியாசின் அலி மகன் இத்ரிஷ் அலி(29), அலிஹீசைன் மனைவி  குதிஜா கா துன்(37) , மன்சூர் அலி மகன் அலிஹீசைன்(48)  மற்றும்  ரபிபுல் இஸ்லாம் (24) ஆகியோர்கள் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து  போதை பொருளை கடத்தி வந்து இங்கு விற்பனை செய்வது தெரிய வந்தது.

பி‌ன்ன‌ர் காவ‌ல்துறை‌யின‌ர் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 2,10,000  மதிப்புள்ள சுமார் 10 கிராம் எடையுள்ள உயர் ரக போதை பொருட்கள் மற்றும் 1900 பிளாஸ்டிக் குப்பிகள் ஆகியவற்றை  பறிமுதல் செய்து அந்த  நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe