சூலூரில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது...

published 9 months ago

சூலூரில் தொடர் வழிப்பறியில்  ஈடுபட்ட குற்றவாளிகள் கைது...

கோவை: கோவை சூலூர் கோவில்பாளையம் மற்றும் மதுக்கரை ஆகிய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட  பகுதிகளில் தொடர்ந்து பகல் நேரங்களில் நடந்து செல்லும் பெண்களிடம் முகவரி கேட்பது போலவும் மளிகை கடையில் தனியாக இருக்கும் பெண்களிடம் பொருள்கள் வாங்குவது போலவும் செயின் பறிப்பு  சம்பவம் நடைபெற்ற நிலையில் அந்த வழிப்பறி சம்பங்களில் ஈடுபட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற 6"குற்ற சம்பவங்களுக்கு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அந்த 6"குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் தனிப்படை காவல் துறையினர் வழிப்பறியில் ஈடுபட்டு தலைமறைவான குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்டகோவை கரும்பு கடை பகுதியை சேர்ந்த சதாம் உசேன் (33) மற்றும் ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த அப்துல் ரஹீம் (33) ஆகிய இருவரையும் தனிப் படையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து 18 சவரன் மற்றும் 5 கிராம் தங்க நகைகள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம்  ஆகியவற்றை பறிமுதல் செய்து அந்த நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் செயல்பட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் எச்சரித்து உள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe