தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தாவர திசு வளர்ப்பு நுட்ப பயிற்சி...

published 9 months ago

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தாவர திசு வளர்ப்பு நுட்ப பயிற்சி...

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தாவர உயிரி தொழில்நுட்பத் துறை, தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப மையம் சார்பில் தாவர திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த பயிற்சியை ஏற்பாடு செய்தது. இந்தப் பயிற்சியில் தமிழ்நாடு, ஒடிசா, மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்காளம் மாநிலங்களை சேர்ந்த 19 பயிற்சியாளர்கள் பங்கேற்று அடிப்படை திசு வளர்ப்பு திறன்கள் மற்றும் வணிகப் பயிர்களின் நுண் பரப்புதல் பற்றிய தொழில்நுட்பம் மற்றும் நடைமுறை அனுபவத்தைப் பெற்றனர்.

 

இந்த பயிற்சியானது ஐந்து கோட்பாட்டு அமர்வுகள் மற்றும் ஒன்பது செயல்முறை அமர்வுகளை உள்ளடக்கி இருந்தது. கோட்பாட்டு அமர்வுகள் தாவர திசு வளர்ப்பு நுட்பங்களை பற்றி அமைந்தது. நடைமுறை அமர்வுகள் திசு வளர்ப்பு பற்றிய அனுபவத்தை வழங்கின. திசு வளர்ப்பு ஆய்வகம் நிறுவுதல். ஊடக தயாரிப்பு குறித்த அமர்வை மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணைப் பேராசிரியை முனைவர் ஹேமபிரபா கையாண்டார். 

திசு வளர்ப்பு நுட்பங்கள் கரு வளர்ப்பு, ஆக்குத்திசு வளர்ப்பு, கணு வளர்ப்பு காலஸ் வளர்ப்பு மற்றும் சஸ்பென்ஷன் வளர்ப்பு பற்றிய நடைமுறை அமர்வுகளை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வல்லுநர்கள் முனைவர் கோகிலா தேவி, முனைவர் ரேணுகா, முனைவர் கே.கே.குமார், முனைவர்  ராஜகோபால் மற்றும் முனைவர்  வாரணவாசியப்பன் மற்றும் வணிகப் பயிர்கள் குறித்த நடைமுறை அமர்வுகளை கல்வித்துறை மற்றும் தொழில்துறையைச் சேர்ந்த நிபுணர்கள் கையாண்டனர்.

கோவை சன்கிளோ பயோடெக் நிறுவன இயக்குனர் முனைவர் பூங்கொடி, வாழை நுண் இனப்பெருக்கம் பரப்புதல் குறித்து செயல்விளக்கம் அளித்தார். கோயம்புத்தூர் கரும்பு வளர்ப்பு நிறுவன முதன்மை விஞ்ஞானி முனைவர் நீலமதி, கரும்பு நுண் இனப்பெருக்கம் குறித்து செயல்விளக்கம் அளித்தார்.  

பங்கேற்பாளர்கள் வேம்பு, வெதேலியா, வாழை, கரும்பு மற்றும் சிங்கோனியம் ஆகியவற்றில் திசு வளர்ப்பு, பெருக்கல், வேர் மற்றும் கடினப்படுத்துதல் ஆகியவற்றைச் செய்தனர். பங்கேற்பாளர்கள் கோயம்புத்தூரில் உள்ள வன மரபியல் மற்றும் மர வளர்ப்பு நிறுவனத்திற்குச் சென்று, மூங்கில் மற்றும் தேக்கு போன்ற முக்கியமான மர வகைகளில் நுண் இனப்பெருக்கத்தை பற்றி கற்றுக்கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe