கோவையில் அரசு பேருந்துக்குள் ஒழுகிய மழை நீர்- குடையுடன் பயணம் செய்த பயணி…

published 8 months ago

கோவையில் அரசு பேருந்துக்குள் ஒழுகிய மழை நீர்- குடையுடன் பயணம் செய்த பயணி…

கோவை: கோவை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ள நிலையில், நேற்று மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. 

இந்த நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் இருந்து மாரிசெட்டிபதி செல்லும் அரசு நகரப் பேருந்தில் மழை நீர் ஒழுகியதன் காரணமாக பேருந்தில் இருந்த பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். பேருந்தின் மேற்கூறையில் இருந்து வழிந்த மழை நீரால் பயணிகள் இருக்கைகளில் அமர முடியாமல் எழுந்து நின்று பயணம் செய்தனர். 

 

அதில் ஒரு பயணி பேருந்துக்குள் குடையை வைத்து அமர்ந்து பயணம் செய்தது சக பயணிகள் இடையே வியப்படையச் செய்தது. அதே போன்று கோவை காந்திபுரம் பகுதியில் இருந்து கோபி செல்லும் அரசு பேருந்தில் பேருந்தின் மேற்கூரையில் இருந்து வழிந்த மழை நீரால் பயணிகள் இருக்கைகளில் அமர முடியாமல் நின்றவாறு பயணம் செய்தனர். 

மேலும் பேருந்தில் கூட்டமாக இருந்ததன் காரணமாக மழை நீர் வழிந்ததை பொருட்படுத்தாமல் நனைந்தபடியே பயணம் செய்தனர். மழைக் காலங்களில் இவ்வாறு அரசு பேருந்துகளில் மழைநீர் ஒழுகுவதால் கடும் அவதிக்கு உள்ளாவதாக சக பயணிகள் கடிந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe