கணவருடன் தீவில் வைப் செய்யும் ரகுல் ப்ரீத் சிங்!

published 8 months ago

கணவருடன்  தீவில் வைப் செய்யும் ரகுல் ப்ரீத் சிங்!

தன் கணவருடன் பிஜி தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை ரகுல் ப்ரீத் சிங், அங்கு எடுக்கும் புகைப்படங்களை  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

தமிழில் இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், நடிகர் கார்த்தி ஜோடியாக   தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து பின்னர் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து  தேவ்,  என்ஜிகே படங்களில் நடித்துள்ளார்.  சிவகார்த்திகேயன் ஜோடியாக   அயலான் படத்தில் நடித்துள்ளார்.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்துள்ளார்.  இவர் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளார்.  

சமீபத்தில்  ரகுல் ப்ரீத் சிங் கோவாவில் திருமணம் செய்துகொண்டார். இருவீட்டார், நண்பர்கள் முன்னிலையில் இவர்களின் திருமணம் நடைபெற்றது.  

சோசியல் மீடியாக்களில் கிளாமர் போட்டோக்களை  பதிவிட்டு அவ்வப்போது ரசிகர்களை குஷிப்படுத்துவார்.  இந்த நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தன் கணவருடன் பிஜி தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வண்ணம் உள்ளார். தற்போது மீண்டும் புகைப்படங்களை  வெளியிட்டு  ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe