கோவையில் இரண்டு நாட்கள் இராணுவ தளவாட கண்காட்சி- எங்கே? எப்போது?

published 8 months ago

கோவையில் இரண்டு நாட்கள் இராணுவ தளவாட கண்காட்சி- எங்கே? எப்போது?

கோவை: இந்திய ராணுவத்தில் பயன்படுத்தபடும் பொருட்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள், உள்நாட்டில் தயாரிக்க படுகின்ற பாதுகாப்பு துறை உபகரணங்கள் தொடர்பான   கண்காட்சி கோவை கொடிசியாவில் வரும் 28 ஆம் துவங்கி இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது..

கோவை அவினாசி சாலையில் உள்ள கொடிசியா தலைமை அலுவலகத்தில் கொடிசியா தலைவர் திருஞானம் மற்றும் நிர்வாகிகள்  சசிக்குமார்,சுந்தரம், பொன்ராம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய தலைவர் திருஞானம்,
இந்திய இராணுவ துறையுடன் கொடிசியா டிபென்ஸ்  இன்னோவேஷன் மற்றும் அடல் இன்குபேஷன் சென்டர் இணைந்து சதர்ன் ஸ்டார் ஆர்மி அகாடமி இண்டஸ்ட்ரி இன்டர்பேஸ் எனும் இராணுவ தொழில் உபகரணங்கள் கண்காட்சி கோவை கொடிசியா அரங்கில் வரும் 28,29  தேதி  நடைபெற உள்ளதாகவும்,இந்திய இராணுவத்தின் தக்சின் பாரத் ஏரியா எனும் தென்னிந்திய பிரிவின் கீழ் நடைபெற உள்ளது என தெரிகைத்தார்.. 
 

நமது நாட்டில் தயாராகும் பாதுகாப்பு துறை உபகரணங்களின் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையிலும் இந்தியா தனது ராணுவ தளவாட உற்பத்தியில் முழு நிறைவு பெறுவதை நம்பிக்கை அளிக்கும் வகையிலும் இக்கண்காட்சி அமைய உள்ளதாக தெரிவித்த அவர், இதில் இந்திய ராணுவ தளவாடங்கள், ராணுவ தளவாட தொழில் சார்ந்த உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்த  உள்ளதாக கூறினார்.
 

இக்கண்காட்சியில் இந்திய தரைப்படை - இந்திய விமானப்படை - இந்திய கப்பல் படை - , நிதி ஆயோக் - தொழில் துறை - தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் - முக்கிய அரசு துறை - கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் துறை சார்ந்த பலரும் கலந்து கொள்ள உள்ளதாகவும் அவர் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe