காந்திபுரத்தில் ஃப்ரீ ஹெல்மெட் வழங்கிய போலீசார்!

published 8 months ago

காந்திபுரத்தில் ஃப்ரீ ஹெல்மெட் வழங்கிய போலீசார்!

கோவை: காந்திபுரம் கிராஸ் கட் சிக்னலில் ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் இலவசமாக ஹெல்மெட் வழங்கி அவர்களுக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்து வருகின்றனர்.

 

இருசக்கர வாகனங்களில் பயணிப்போம் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இதனை கோவை மாநகர போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

ஹெல்மெட் அணியாமல் பயணிப்போருக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

இதனிடையே காந்திபுரம் கிராஸ்கட் சிக்னலில் போக்குவரத்து காவல்துறை எஸ்.ஐ., கார்த்திக், டிராபிக் வார்டன் பிரபு மற்றும் போக்குவரத்து காவலர்கள் ஆகியோர் வாகன தணிக்கை நடத்தினர்.

அப்போது ஹெல்மெட் அவசியத்தை  விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு அறிவுரை வழங்கி அவர்களுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe