நிதி நிறுவனத்தில் பணம் இழந்தவர்கள் புகார் அளிக்க அழைப்பு...

published 8 months ago

நிதி நிறுவனத்தில் பணம் இழந்தவர்கள் புகார் அளிக்க அழைப்பு...

கோவை: கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
 

கோவை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே ‘சன்மேக்ஸ்’ என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் பலர் லட்சக்கணக்கில் பணம் முதலீடு செய்தனர். ஆனால் நிதி நிறுவனத்தினர் முதலீடு செய்தவர்களுக்கு பணம் திரும்ப கொடுக்காமல் ஏமாற்றினர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். 

புகாரின் பேரில், இந்த நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி சிவராம கிருஷ்ணன் மற்றும் கீதா (எ) கீதாஞ்சலி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே இந்நிறுவனத்தால் பாதிக்கப்பட்டு பணம் இழந்தவர்கள் தங்களுடைய அசல் ஆவணங்களுடன் கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் பொருளாதார குற்றப்பிரிவில் நேரில் வந்து புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe