கோவை வந்த ரெயில்களில் அடுத்தடுத்து 2 பயணிகள் திடீர் சாவு…

published 8 months ago

கோவை வந்த ரெயில்களில் அடுத்தடுத்து 2 பயணிகள் திடீர் சாவு…

கோவை: கோவை ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு இன்று காலை தஞ்சாவூரிலிருந்து செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது . அதில் எஸ் 11 பெட்டியில் பயணம் செய்த திருவாரூர் அருகே உள்ள  மன்னார்குடி , சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த காஜா (வயது 52) என்ற பயணிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இன்று அதிகாலை 5.30 மணிக்கு ரெயில் கோவை அருகில் வந்த போது அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அவரது மனைவி பூங்குழலி கொடுத்த புகாரின் பேரில் கோவை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதேபோன்று நேற்று இரவு பாலக்காட்டில் இருந்து பெங்களூர் சென்ற ஐலண்ட்எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் பயணம் செய்த மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த பெண் பயணியும் கோவை அருகில் ரயில் வந்த போது திடீரென இறந்தார்.

அடுத்தடுத்து ரயிலில் வந்த பயணிகள் இறந்ததால் கோவை ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோவை வடவள்ளியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்ற பயணி கோவை ரயிலில் ஏறும்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

இந்த நிலையில் இப்போது 2 பயணிகள் அடுத்தடுத்து இறந்தது பயணிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 24 மணி நேரமும் டாக்டர் வசதியுடன் மருத்துவ சிகிச்சை வசதிஏற்படுத்தினால் இது போன்ற பயணிகள் இறப்புகளை தடுக்க முடியும் என்று பயணிகள் கூறினர்.
இது குறித்து ரயில்வே பயணிகள் கூறியதாவது.
கோவை ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தினமும் 70 ரயில்கள் வந்து செல்கின்றன. தினமும் 60 முதல் 70 ஆயிரம் பயணிகளும் , விழாக் காலங்களில்  1 லட்சம் முதல் 1.5 லட்சம் பயணிகள் வரையும் பயணம் செய்கிறார்கள்.
 

பயணிகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்படும் போது 108 ஆம்புலன்ஸ்சை வரவழைத்து அனுப்புவதில் சிக்கல் உள்ளது. நாடித்துடிப்பு மிகவும் குறைந்த பயணிகளை அவர்கள் 108 ஆம்புலன்ஸில் ஏற்றுவதில்லை. எனவே இது போன்ற பயணிகளுக்கு ரெயில் நிலைய வளாகத்திலேயே அவசர சிகிச்சை அளித்த பிறகு தான் மேல்சிச்சைக்கு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியும். 

ஆனால் அந்த நேரத்தில் டாக்டர்கள் இல்லாதது பயணிகளை காப்பாற்ற முடியாமல் போகிறது. எனவே ரயில் நிலையங்களில் டாக்டர்கள் குழு உடன் மருத்துவ வசதி ஏற்படுத்த வேண்டும்.. இவ்வாறு  அவர்கள் கூறினர்..இந்த ஆண்டில் இதுவரை 6 பயணிகள் இதுபோன்று இறந்து உள்ளதாக கூறப்படுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe