பத்திரிகையாளர் மறைவு- கோவையில் சக பத்திரிகையாளர்கள் அஞ்சலி!

published 8 months ago

பத்திரிகையாளர் மறைவு- கோவையில் சக பத்திரிகையாளர்கள் அஞ்சலி!

கோவை: கோவையில் தனியார் பத்திரிக்கை புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்தவர் அஜய் ஜோசப். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொள்ளாச்சி பகுதியில் வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது நாய் ஒன்று குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானார்.

அந்த விபத்தில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் அவருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட பத்திரிக்கையாளர்கள், புகைப்பட கலைஞர்கள்  அஞ்சலி செலுத்தினர். அப்போது அஜய் வேலையின் போது எவ்வாறு துறுதுறுப்புடன் இருப்பார், அவரது எளிமையான பழக்க வழக்கங்கள், நட்பு ரீதியான விஷயங்கள் என பலவற்றை பகிர்ந்து கொண்டனர். பின்னர் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள் அனைவரும் வாகனங்களில் செல்லும் போது பாதுகாப்புடன் செல்ல வேண்டுமென மூத்த பத்திரிக்கையாளர்கள் அறிவுறுத்தினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe