தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் விவசாயிகள் வாழ்வாதார மேம்பாட்டிற்கான கள ஆய்வு நிகழ்ச்சி...

published 8 months ago

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் விவசாயிகள் வாழ்வாதார மேம்பாட்டிற்கான கள ஆய்வு நிகழ்ச்சி...

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விரிவாக்கக் கல்வி இயக்ககம் மற்றும் தமிழ்நாடு அரசின் வேளாண்மை விவசாய நலத்துறை ஆகியவை இணைந்து விரிவாக்கச் சீர்திருத்தங்களுக்கான மாநில விரிவாக்கத் திட்டம் (SSEPERS) - வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ATMA) ஆதரவின் கீழ் ஆராய்ச்சி விரிவாக்க இடர்பாடு களையும் ஒரு நாள் கலந்துரையாடல் நிகழ்வு நடை பெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விரிவாக்கக் கல்வி இயக்குநர் முனைவர் முருகன் வரவேற்றார். இந்த நிகழ்வின் நோக்கத்தை, கூடுதல் வேளாண் இயக்குநர் (GOI திட்டங்கள்)  சங்கரசுப்ரமணியம் விளக்கினார். அதில், ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்கலைக்கழக விஞ்ஞானிகளை உள்ளடக்கிய உழவர் களப் பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் குறுகிய கால ஆராய்ச்சியை முன்மொழியலாம் என்றும் வலியுறுத்தினார். இதுபோன்ற ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இந்திய அரசு ATMAவின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது என்றும் 
கூறினார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் கீதாலட்சுமி. நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து, பங்கேற்பாளர்களுக்கு ஒவ்வொரு இயக்குநரகத்தின் கீழும் பல்கலைக்கழகம் உருவாக்கிய தொழில்நுட்பங்கள் மற்றும் ரகங்களை விவசாயிகளிடம் களப் பணியாளர்கள் ஊக்குவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 

இவ்விழாவில், தமிழ்நாட்டின் 31 வேளாண் அறிவியல் மையங்களில் இருந்தும் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மூத்த விஞ்ஞானி மற்றும் தலைவர் மற்றும் 37 மாவட்டங்களைச் சேர்ந்த வேளாண்மை இணை இயக்குநர்கள் மற்றும் உதவி வேளாண் இயக்குநர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்று, மாநிலத்தில் விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சிக்குரிய சிக்கல்கள் குறித்து விவாதித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe