மத்திய அரசு வேலை: ரூ.60,000 வரை சம்பளம்.. உடனே விண்ணப்பிங்க!

published 8 months ago

மத்திய அரசு வேலை:  ரூ.60,000 வரை சம்பளம்.. உடனே விண்ணப்பிங்க!

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மல்டி-டெக்னாலஜி நிறுவனமான பி.இ.எம்.எல் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு  அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் கார் ஓட்டுநர் (Staff Driver) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தகுதி

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 10ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்

இலகுரக, கனரக வாகன ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி அனுபவத்துடன், மோட்டாரில் திடீரென ஏற்படும் பழுதுகளை சரிசெய்யும் திறன்  பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.16,900 - 60,650 வரை  மாத சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு

திறன் தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியான நபர்கள்  தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை

www.bemlindia.in என்ற இணையதளத்தில் உள்ள  விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து, பூர்த்தி செய்ய வேண்டும். தேவையான சான்றிதழ்களின்  நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் வந்துசேர கடைசி நாள் 5.6.2024 ஆகும்.

அனுப்ப வேண்டிய முகவரி: Sr.Manager(Corporate Recruitment), Recruitment Cell, BEML Soudha, No:23/1. 4th main Road, S.R.Nagar, Bangalore-560 027

மேலும் விவரம்

இந்த பணியிடங்கள் தொடர்பான  மேலும் விவரங்களை அறிந்து கொள்வதற்கு https://www.bemlindia.in/wp-content/plugins/career/WCP/DATA//Writereaddata/Career/KP_S_05_2024%20-%20Final.pdf என்ற அறிவிப்பை பார்க்கவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe