கோவையில் வயிற்று வலிக்கு கடையில் மருந்து வாங்கிக் குடித்தவர் பலி!

published 8 months ago

கோவையில் வயிற்று வலிக்கு கடையில் மருந்து வாங்கிக் குடித்தவர் பலி!

கோவை:கோவை அருகே உள்ள கவுண்டம்பாளையம் ,காமராஜ் நகரில் தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு ஏராளமான பேரு வேலை பார்த்து வருகிறார்கள்.
 

இலங்கை பணியாற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்கள் அங்கு உள்ள நாகம்மாள் காலனி பகுதியில் கட்டிடத்தில் தங்கி வேலைக்கு சென்று வருகிறார்கள்.
இதில் சந்தோஷ் ( வயது 20) என்பவர் நேற்று மதியம் உணவு அருந்திவிட்டு வயிறு வலிக்கிறது எனக்கூறி கடையில் மருந்து வாங்கி வெந்நீரில் கலந்து குடித்துள்ளார். 

அதன் பிறகு தனது சகோதரர் ஜெகதீஷிடம் ஓய்வு எடுப்பது செல்வதாக கூறிவிட்டு அறைக்கு சென்ற தூங்கி உள்ளார்.
ஆனால் அதன் பிறகு நீண்ட நேரம் ஆகியும் அவர் எழுந்து வராததால் சந்தேகம் அடைந்த ஜெகதீஷ் உள்ளே சென்று பார்த்தபோது அவர் இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார் 
இதுகுறித்து கவுண்டம்பாளையம் போலீஸில் ஜெகதீஷ் புகார் செய்தார். போலீசார் சந்தோஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.
சந்தோஷ் கடந்த சில நாட்களாக சாப்பிட்ட உணவு செமிக்காமல் அவதிப்பட்டு உள்ளார். வாயு பிரச்சனை இருந்த நிலையில் கடையில் தற்காலிக தீர்வு கொடுக்கும் மருந்தை வாங்கி சாப்பிட்ட போது திடீரென ஒரு இறந்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe