காந்திபுரத்தில் செல்போன் திருடியவரை 5 நிமிடத்தில் பிடித்த போலிஸ்...

published 8 months ago

காந்திபுரத்தில் செல்போன் திருடியவரை 5 நிமிடத்தில் பிடித்த போலிஸ்...

கோவை: கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் ஐந்து நிமிடத்தில் செல்போன் திருடனை விரட்டி பிடித்த தலைமைக் காவலர் கந்தசாமி செயலை பொதுமக்கள் பாராட்டினர்

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜ் தனது குடும்பத்துடன் கோவையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்தவர் ஈஷா யோகா மையம் சென்று திரும்பி வரும் பொழுது பேருந்தில் அவர் பையில் இருந்த மொபைல் போன் காணாமல் போனது சற்று பதறிப் போனவர்  தனது மொபைலை காணவில்லை என ராஜ் காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் புற காவல் நிலையத்தில் பணியில் இருந்த ஹெட் கான்ஸ்டபிள் கந்தசாமி இடம் புகார் அளித்தார். 

 

புகாரின் பேரில் பேருந்தில் வந்தவர்களை  இரண்டு பட்டாலியன் முத்துகிருஷ்ணன் மற்றும் மதன் ஆகியோருடன் உடனே சோதனை செய்தனர் அப்பொழுது மொபைல் போனை திருடியவன் தப்பி போடுவதை கண்ட காவல்துறையினர் ஓடிச்சென்று அவரைப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர் இதனால் கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது காவல்துறையினரின் இந்த துரித செயலை கண்டு பயணிகள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe