கோவை மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விஜய்; 24 மாவட்டங்களுக்கு தேதி அறிவிப்பு!

published 8 months ago

கோவை மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விஜய்; 24 மாவட்டங்களுக்கு தேதி அறிவிப்பு!

கோவை: கோவை உட்பட தமிழகத்தின் 24 மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு விஜய்யின் த.வெ.க., சார்பில் பரிசு வழங்கப்பட உள்ளது.

அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய், முன்னதாகவே சமூக நலப்பணிகளை மேற்கொண்டு வந்தார். கடந்தாண்டு சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தார் விஜய்.

இதனிடையே இந்தாண்டும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க த.வெ.க., சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 10 மற்றும் 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்த த.வெ.க., முடிவு செய்துள்ளது.

முதற்கட்டமாக ஜூன் 28ல் கோவை, ஈரோடு, மதுரை, உள்ளிட்ட 21 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சி சென்னை திருவான்மியூரில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட நிகழ்ச்சியை ஜூலை 3ம் தேதி, சென்னை, செங்கல்பட்டு, கடலூர், தஞ்சை திருச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்காக நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2026ம் ஆண்டு அரசியலில் களமிறங்கப்போவதாக விஜய அறிவித்துள்ள நிலையில் இந்த பாராட்டு விழா அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe