லட்சக்கணக்கில் லாபம்; எப்போது வரை கோவை அரசு பொருட்காட்சி!

published 8 months ago

லட்சக்கணக்கில் லாபம்; எப்போது வரை கோவை அரசு பொருட்காட்சி!

கோவை: கோவையில் போடப்பட்டுள்ள அரசுப் பொருட்காட்சியினை (09.06.2024) நேற்று வரை
71,871 நபர்கள் பார்வையிட்டுள்ளனர்- 
இதன் மூலம் அரசுக்கு ரூ.10.05 இலட்சம் வருவாய் வரப்பெற்றுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோயம்புத்தூர் மாவட்டம், வ.உ.சி மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் கடந்த 25.05.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி  அரசுப் பொருட்காட்சி தொடங்கி வைத்தார். இப்பொருட்காட்சியானது தொடர்ந்து 45 நாட்கள் நடைபெறுகின்றது. ஒவ்வொரு துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத்திட்டங்கள் மற்றும் பொதுமக்கள் இத்திட்டங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட துறையினை அணுகி அறிந்து கொள்ளும் வகையில் பொருட்காட்சி அமைந்துள்ளது.

இப்பொருட்காட்சியில் 27 அரசுத்துறை அரங்களும், 7 அரசுசார்பு நிறுவனங்கள் என மொத்தம் 34 அரசுத்துறை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசின் திட்டங்கள் மட்டுமின்றி பொழுதுபோக்கு அம்சங்களும் இப்பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ளன. பொதுமக்கள் அரசுப் பொருட்காட்சியினை காண 29.05.2024 அன்று முதல் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. அரசுப்பொருட்காட்சியை காண வரும் பெரியவர்களுக்கு ரூ.15/-ம், சிறியவர்களுக்கு ரூ.10/-ம் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

(09.06.2024)நேற்று வரை 12 நாட்களில் அரசுப் பொருட்காட்சியினை 57,441 பெரியவர்களும். 14,430 சிறியவர்களும் என மொத்தம் 71871 நபர்கள் பார்வையிட்டுள்ளனர். இதன் மூலம் ரூ.10,05,915/- அரசுக்கு வருவாய் வரப்பெற்றுள்ளது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இப்பொருட்காட்சியினை காண வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொருட்காட்சி ஜூலை 7ம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe