அவினாசி சாலையில் சுரங்க நடைபாதை வரப்போகிறது மக்களே..!

published 2 years ago

அவினாசி சாலையில் சுரங்க நடைபாதை வரப்போகிறது மக்களே..!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :  https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE

கோவை : கோவை-அவினாசி சாலையில் 5 இடங்களில் சுரங்க நடைபாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை அவினாசி சாலையில் ரூ.1621.30 கோடி மதிப்பில் கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

கோவை மாநகரின் பிரதான சாலையாக கருதப்படும் அவினாசி சாலையில் விமான நிலையம், பல்வேறு கல்லூரிகள், பள்ளிகள், தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், டைடல் பார்க் போன்றவை அமைந்துள்ளன.

சேலம், ஈரோடு, திருப்பூர் என பல முக்கிய நகரங்களுக்கும் முக்கிய வழித்தடமாகவும் இருப்பதால் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில் 10.10 கிமீ நீளத்தில் இந்த பறக்கும் பாலம் அமைக்கப்படுகிறது. இப்பாலப் பணிகளில் 5 முக்கியமான இடங்களில் சுரங்க நடைபாதையும் அமைக்கப்பட உள்ளது.

இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை முக்கியமான ஐந்து இடங்களில் சுரங்கநடைபாதை அமையவுள்ளது. மேலும் மூன்று இடங்களில் சிறுபாலங்களை அகலப்படுத்துதல் மற்றும் மூன்று இடங்களில் சிறுபாலங்களை திரும்பக்கட்டுதல் பணியும் நடைபெறவுள்ளது’. என்றனர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe