தடாகத்தில் செங்கல் சூளை பகுதியில் பிடிபட்ட 10 அடி பைத்தான் மலை பாம்பு…

published 8 months ago

தடாகத்தில் செங்கல் சூளை பகுதியில் பிடிபட்ட 10 அடி பைத்தான் மலை பாம்பு…

கோவை; கோவை தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் செங்கல் சூளைக்கு அருகே, பத்து அடி மதிக்கத்தக்க மலைப் பாம்பு ஒன்று வந்து இருக்கிறது. 

இதனை அப்பகுதியில் இருந்த சிலர் பார்த்தவுடன் பயந்து இருக்கின்றனர். பைத்தான் மலை பாம்பு அந்தப் பகுதியில் உள்ள புதர் ஒன்றுக்குள் சுருண்டு கொண்டது. உடனடியாக வனத்துறைக்கும், பாம்பு பிடி வீரருக்கும் அப்பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் அலைபேசியில் தகவல் தந்தனர். 

இந்த நிலையிலே வனத்துறை வன பணியாளர்களும், வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை சார்ந்த பாம்பு பிடி வீரரான விக்னேஷ் குமாரும் நஞ்சுண்டாபுரம் அங்கு சென்றனர். அப்பொழுது அங்கு இருந்த மலைப் பாம்புவை வனத் துறையுடன் இணைந்து, பாம்பு பிடி உபகரணங்கள் உதவியுடன், பாம்பு பிடி வீரர் விக்னேஷ் குமார் மீட்டு பைக்குள் அடைத்தார். 

அடைக்கப்பட்ட பாம்பு பின்னர் மாங்கரை வனப்பகுதியில் விடுவிக்கின்றனர். பொதுமக்கள் தாங்கள் வசிக்கக் கூடிய பகுதிகளில், புதர் மண்டி கிடக்காமல் பார்த்துக் கொள்வது அவசியமாக இருக்கின்றது. தற்பொழுது கோடை மழை பொழிந்த நிலையில், பல்வேறு இடங்களிலும் புதர்கள் காணப்படுகின்றன. 

இனி வரக் கூடிய காலங்களிலும் மழை அதிக அளவில் பொழியும் என்பதனால், செடிகள் புதர்கள் வளர ஆரம்பிக்கும் நிலை ஏற்பட்டு இருக்கின்றன. இந்த நிலையிலே, புதர் பகுதிகளில் பாம்புகள் முகாமிடும் என்பதனால், பொதுமக்கள் தங்களை சுற்றி உள்ள பகுதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் உயிரியல் ஆர்வலர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe