அரசு மருத்துவமனையில் வேலை: ரூ.60,000 சம்பளம்... உடனே விண்ணப்பிங்க!

published 8 months ago

அரசு மருத்துவமனையில் வேலை: ரூ.60,000 சம்பளம்... உடனே விண்ணப்பிங்க!

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலிப்பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது.

மேலாண்மை அலுவலர் (Quality Manager) பணியிடத்தை தற்காலிக அடிப்படையில் ஒப்பந்த முறையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வி

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் மருத்துவமனை நிர்வாகம்/ சுகாதார மேலாண்மை/ பொது சுகாதாரம் ஆகிய துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  2 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

சம்பளம்

மேலாண்மை அலுவலர் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு ரூ.60,000 மாத சம்பளம் வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?

தேவையான  ஆவணங்களுடன், சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பப்படிவத்தை தபால் மூலம் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 18.06.2024 ஆகும்.

அனுப்ப வேண்டிய முகவரி : முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, உதகமண்டலம், நீலகிரி மாவட்டம் - 643001.

மேலும் விவரங்கள்

இந்த பணி தொடர்பான மேலும் விவரங்களை அறிந்து கொள்ள https://nilgiris.nic.in/ என்ற  இணைய தள பக்கத்தைப் பார்க்கவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe