கோவையில் நடு ரோட்டில் காரை மறித்த கொள்ளை கும்பல்.. வடமாநிலங்களை மிஞ்சும் திக்...திக்... காட்சிகள்!

published 8 months ago

கோவையில் நடு ரோட்டில் காரை மறித்த கொள்ளை கும்பல்.. வடமாநிலங்களை மிஞ்சும் திக்...திக்... காட்சிகள்!

கோவை: கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்தவர் அஸ்லாம் சித்திக்(27). இவர் மடிக்கணினி உள்ளிட்ட கணினி சாதனங்களை கடந்த 14 ஆம் தேதி பெங்களூரில் வாங்கிக் கொண்டு அவரது நண்பருடன் சேலம் கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்துள்ளார். 

அப்போது அதிகாலை 3 மணியளவில் கோவை அருகே பாலதுரை பிரிவு என்ற பகுதியில் அவரது காரை 3 கார்கள் பின் தொடர்ந்து  துரத்தி வந்துள்ளன. அதில் ஒரு கார் இவர்களது காரை  மறைத்து நின்று  அதிலிருந்து இறங்கிய முகமூடி அணிந்த நபர்கள் இவர்களது காரை கட்டைகளால் தாக்கி உள்ளனர். பின்னர் காரில் இருந்த பொருட்களை கொள்ளை அடிக்க முயன்ற நிலையில் ஓட்டுநர் காரை அங்கிருந்து ஓட்டி எடுத்து சென்றுள்ளார்.

இதுகுறித்து சித்திக் மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட மதுக்கரை போலிசார் இச்சம்பவத்தில் ஈடுபட்ட பாலக்காடு மாவட்டம் சித்தூர் பகுதியில் சேர்ந்த சிவதாஸ், ரமேஷ்பாபு, விஷ்ணு மற்றும் பாலக்காடு பகுதியை சேர்ந்த அஜய் குமார் ஆகிய நான்கு பேரை கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவத்திற்கு பயன்படுத்திய இரண்டு கார்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.  மேலும் இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள இரண்டு பேரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் காரில் உள்ள கேமராவில் பதிவாகி இருந்த இச்சம்பவத்தின் பரபரப்பு காட்சிகள் தற்பொழுது வெளியாகி உள்ளது.

 

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/CH35ZwITxQY

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe