கோவில்களில் அர்ச்சகர் பணி: ஓராண்டு பயிற்சி... இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு!

published 8 months ago

கோவில்களில் அர்ச்சகர் பணி: ஓராண்டு பயிற்சி... இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள கோவில்களில் அர்ச்சகராக  உதவித்தொகையுடன் ஓராண்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது. தமிழக கோவில்களில் ஓராண்டு அர்ச்சகர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக  அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை பார்த்தசாரதி கோவில், ஸ்ரீரங்கம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் வைணவ அர்ச்சகர்கள் பயிற்சி பள்ளிகளும்,  மதுரை, திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர் ஆகிய இடங்களில் சைவ அர்ச்சகர்கள் பயிற்சி பள்ளிகளும் செயல்படுகின்றன.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் இந்தப் பயிற்சி பள்ளிகளில் ஓராண்டு அர்ச்சகர் பயிற்சி பெற விண்ணப்பிக்க இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  

இங்கு  அர்ச்சகர் பயிற்சி இலவசமாக வழங்கப்படும். உணவு, தங்குமிடத்துடன் ரூ.4000 உதவித் தொகை வழங்கப்படும். மேலும் இங்கு பயிற்சி பெற்று முடித்த  பின்னர் அர்ச்சகர் பணிகளில் அரசு வேலை வாய்ப்பு பெறலாம்.

இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், இந்து சமய கோட்பாடுகளை கடைப்பிடிப்பவராக இருக்க வேண்டும். 14 வயது முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  

விண்ணப்பிக்க  விரும்பும் நபர்கள் சம்பந்தப்பட்ட அர்ச்சகர் பள்ளிகளில் ஓராண்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.  இது தொடர்பான மேலும்  தகவல்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை காணவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe