Breaking News: உக்கடம் புதிய மேம்பாலத்தில் விபத்து!

published 8 months ago

Breaking News:  உக்கடம் புதிய மேம்பாலத்தில் விபத்து!

கோவை: உக்கடத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தைச் சுற்றிப்பார்க்கச் சென்ற சிறுவர்கள் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த உக்கடம்- ஆத்துப்பாலம் சாலையில் போக்குவரத்து நெரிசலைத் குறைக்கும் விதமாக ரூ.481 கோடி செலவில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் மேம்பாலம் கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்த பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளன. முதற்கட்டமாக உக்கடம் முதல் கரும்புக்கடை வரை முதல் கட்டமாக மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. இதையடுத்து ஆத்துப்பாலம் முதல் பொள்ளாச்சி,பாலக்காடு சாலைகளில் 2-வது கட்டமாக மேம்பாலப் பணிகள் நடைபெற்றது.

2-ம் கட்ட மேம்பாலம் மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணிகள் கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்றது. முதலில் மந்த நிலையில் நடந்த மேம்பாலப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இம்மாத இறுதியில் மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட உள்ளது.

இதனிடையே இந்த மேம்பாலத்தின் ரம்யமான புகைப்படங்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தது. பலரும் தடுப்புகளைத் தாண்டி, திறக்காத மேம்பாலத்தைச் சுற்றி வலம் வரத்தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில் பக்ரீத் விடுமுறை தினமான இன்று குறிச்சி பிரிவு இட்டேரி பகுதி சேர்ந்த 4 சிறுவர்கள் ஒரே பைக்கில், மேம்பாலத்தைச் சுற்றிப்பார்க்கப் புறப்பட்டனர். அவர்கள் மேம்பாலத்தில் வாகனத்தில் வலம் வந்தபோது, பக்கவாட்டு தடுப்புச்சுவரில் மோதி, கீழே விழுந்தனர். இதில் இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்தனர். 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இது அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

தற்போது மேம்பாலத்தில் யாரும் ஏற முடியாiத வகையில் தடுப்புகளை போலீசார் அமைத்துள்ளனர்.

திருச்சி சாலை மேம்பாலம் திறக்கப்பட்ட போது தொடர் விபத்துகள் ஏற்பட்ட நிலையில், அந்த மேம்பாலத்தில் விபத்துகளைத் தடுக்க நெடுஞ்சாலைத்துறை பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டது. அந்த வகையில், சோதனை ஓட்டமாக இந்த மேம்பாலத்தில் தேர்ந்த ஓட்டுநர்களை பயன்படுத்தி வாகனம் இயக்கிப்பார்த்த பின்னர் மக்கள் பயன்பாட்டிற்கு மேம்பாலத்தைத் திறக்க வேண்டும். அப்போது தான் விபத்துகளையும், அசம்பாவிதங்களையும் தவிர்க முடியும் என்கின்றனர் ஆர்வலர்கள்.

அதுவரை மேம்பாலத்தில் யாரும் ஏற முயற்சிக்க வேண்டாம் கோவை வாசிகளே, ஆபத்து; இதனை மற்ற நண்பர்களுக்கும் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்திடுங்கள்.

இதையும் படிக்கலாம்: கோவையில் பாதாள சாக்கடையில் விழுந்த இளம் பெண்: அதிகாரிகள் அலட்சியம்! வீடியோ காட்சிகள்
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe